கடந்த சில மாதங்களில் சீன சந்தைகளில் விற்கப்படும் இறைச்சி மற்றும் மீன் வகை பற்றி விவாதிக்கப்பட்டது அணைவருக்கும் தெரிந்ததே .
உலகெங்கிலும் உள்ள பல வல்லுநர்கள் கொரோனா தொற்று இந்த சந்தை மூலமாகத்தான் பரவியது என்று கூறினார்கள் . மேலும் அவர்கள் மக்களுக்கு ஏற்படுத்தும் சுகாதார அச்சுறுத்தல்களைப் பற்றி கேள்வி எழுப்பினர். அத்தகைய சூழ்நிலையில் சீனாவிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் தொடர்பான செய்திகளை ஜீரணிக்க கொஞ்சம் கடினமாக இருக்கும்.
அண்மையில், ஒரு சீன மனிதர் தான் சமைத்த மீனை சாப்பிட்ட பிறகு கல்லீரலில் பாதி இழந்துள்ளார். மருத்துவ அறிக்கையின்படி, மீன்களில் உள்ள ஒட்டுண்ணி தட்டையான புழுக்கள் மனிதனின் கல்லீரலுக்குள் முட்டையிட்டது தெரிய வந்துள்ளது. 55 வயதான நோயாளி பசியின்மை, வயிற்றுப்போக்கு, சோர்வு மற்றும் வயிற்று வலி ஆகியவற்றால் மருத்துவரை நாடினார். இந்நிலையில் ஹாங்க்சோ மருத்துவமனையின் அறிக்கையில், அந்த நபர் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஒரு பாதிப்பால் போராடி வருவதாகக் கண்டறிந்தனர்.
நோயாளியின் ஸ்கேன் எடுத்தலில் அதில் அவரது கல்லீரலின் இடது பகுதியில் 19 செ.மீ நீளமும் 18 செ.மீ அகலமும் கொண்ட சீழ் நிரப்பப்பட்ட சாக்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் தெரிந்ததை கண்டு மருத்துவர்கள் திகைத்துப் போனார்கள். அதுமட்டுமில்லாமல் அதில் கட்டிகள் வளர ஆரம்பித்தன. பல
சோதனைகளுக்குப் பிறகு, அந்த மனிதனுக்கு குளோனோர்கியாசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒட்டுண்ணி தட்டையான புழுக்களால் ஏற்பட்ட தொற்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனிதனின் கல்லீரலைக் காப்பாற்ற, மருத்துவர்கள் வளர்ச்சியிலிருந்து அதன் அளவை பாதியாகக் குறைக்க முடிந்தது. இருந்தாலும் முதல் செயல்முறைக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு கல்லீரலில் கட்டிகள் இருந்தன. வேறு வழியில்லாமல், அறுவை சிகிச்சையாளர்கள் கல்லீரலின் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றினர்.
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…