மாணவியின் குழந்தையை முதுகில் 3 மணிநேரம் சுமந்து பாடம் எடுத்த பேராசிரியர்..!

Default Image

அமெரிக்காவிலுள்ள சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ரமடா சிசோகோ. வழக்கம்போல் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இளம் பெண் தன்னிடம் கை குழந்தை இருப்பதால் குழந்தை பார்த்து கொள்வதற்கு ஆள்கள் இல்லாததால் என்னால் வகுப்புக்கு சரியாக வர முடியவில்லை என கூறினார்.

உடனே பேராசிரியர் ரமடா உன் கைக்குழந்தையுடன் வகுப்பறைக்கு வரலாம் அனுமதி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி  கைக்குழந்தையுடன் வகுப்பறைக்கு  வந்துள்ளார். கையில் குழந்தை இருந்தால் பாடத்தை கவனிக்கவும் ,படிக்கவும் தடையாக இருக்கும் என பேராசிரியர் ரமடா நினைத்தார்.

இதனால் மாணவியின் குழந்தையை தன் முதுகில் கட்டிக்கொண்டு ரமடா பாடம் எடுத்துள்ளார். இதுதொடர்பான சமூக வலைதளங்களில் பதிவிட்ட ரமடாவின் மகள் , என் அம்மாதான் எனக்கு முன்னுதாரணம். தன் மாணவியின் குழந்தையை முதுகில் மூன்று மணிநேரம் சுமந்து பாடம் எடுத்துள்ளார்.

உலகிலேயே தன் மகளைப் போல பார்க்கும் அம்மாவை நான் பெற்று இருப்பது என் அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பேராசியர் ரமடாவை பலர் பாராட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்