3,000 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவின் வனப்பகுதிக்குள் மீண்டும் வந்த டாஸ்மேனியன் டெவில்…!

Default Image

3,000 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவின் வனப்பகுதிக்குள் மீண்டும் வந்த டாஸ்மேனியன் டெவில். 

டாஸ்மேனியன் டெவில் என்பது பாலூட்டிகளில் வயிற்றில் பையில் உள்ள மாமிச உண்ணி இனத்தை சேர்ந்தது இ.து ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் மட்டுமே காணப்பட்டதால் இதற்கு டாஸ்மேனியன் டெவில் என்று பெயரிட்டுள்ளனர். இந்த விலங்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் படிப்படியாக இதன் எண்ணிக்கை குறைந்து, ஒன்றரை லட்சம் அளவுக்கு வந்துவிட்டது. மேலும் 1990 ஆம் ஆண்டுகளில் அரிய வகை புற்றுநோய்க் இந்த விலங்குகளை தாக்கியதால், இந்த விலங்குகளின் இனம் அழிவின் விளிம்புக்கு சென்றது. இந்நிலையில் இந்த விலங்குகளை பாதுகாக்கவும் இதனை அதிகரிக்கவும் ‘ஆஸி ஆர்க்’ என்ற அமைப்பு திட்டத்தை கையில் எடுத்தது.

அதன்படி இந்த அமைப்பு மற்ற வன விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் உடன் இணைந்து டாஸ்மேனியன் டெவில் விலங்கு இனப்பெருக்கம் செய்து வந்தது.  இவர்களின் முயற்சியால், 26 டாஸ்மேனியன் டெவில் ஆஸ்திரேலிய தேசிய பூங்காவில் அவிழ்த்து விடப் பட்டுள்ளது .

இந்த விலங்குகள் ஆஸ்திரேலியாவின் பேரிங்டன் டாப் பகுதியில் 400 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது.

டாஸ்மேனியன் டெவிலை பொறுத்தவரையில், 8 கிலோ வரை எடை கொண்டதாக காணப்படும். இது மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல என்றும், தற்போது 25,000 டெவில் விலங்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்