மிக உயரமான அமெரிக்க மனிதர் மாரடைப்பால் மரணம்…!
அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் எனும் புகழ்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த அசாதாரணமான உயரம் கொண்டவர் தான் இகோர் வோவ்கோவின்ஸ்கி. இவர் 7 அடி 8 அங்குல உயரம் கொண்டவர். அதாவது 234 சென்டி மீட்டர் உயரம் கொண்டவர். இவர் தன்னுடைய அதிகப்படியான உயரத்திற்காக 27 ஆவது வயதில் அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாக இவருக்கு இதயநோய் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 20-ஆம் தேதி இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அன்றே அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் எனும் புகழ்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கிவின் மறைவு அமெரிக்கர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.