ஆப்கானிஸ்தானில் இன்று ஆட்சியமைக்கிறது தலிபான்….!
ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான்கள் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் அந்நாட்டில் குடியிருந்த இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பிற நாட்டு மக்கள் அனைவரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில், தலிபான்கள் ஆட்சி அமைத்த சிறிது நாட்களிலேயே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சில மோசமான செயல்களை செய்தனர்.
மேலும் பெண்களுக்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனையடுத்து இந்த ஆட்சியிலாவது பெண்களுக்கு உரிமை வழங்கப்படுமா? இந்த ஆட்சி மோசமானதாக இல்லாமல் நல்ல ஆட்சியாக இருக்குமா என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழும்பியுள்ளது.