வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை – அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நாம்தமிழர் கட்சியின் பொது செயலாளர் சந்திரசேகரன், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், இது தொடர்பாக இவர்கள் அளித்திருந்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவான சின்னத்தை பொறிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்களது இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.