“நெஞ்சம் மறப்பதில்லை” படத்திற்க்கு வந்த திடீர் சோதனை…!

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ரேடியன்ஸ் மீடியா மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில்
“எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக தங்களிடம் ரூபாய் 2.42 கோடி கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1.75 கோடி ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1.24 கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாகவும், இதனால் தங்கள் நிறுவனத்திற்கு தர வேண்டிய மீதமுள்ள தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பீ.டி.ஆஷா இடைக்கால தடை என்று உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025