கொரோனா நோயாளிகளின் நுரையீரலை குறிவைக்கும் உயிரணு பாதிப்பு.! ஆய்வில் புதிய தகவல்…

Covid 19

சென்னை: கொரோனா வைரஸ் நோயாளிகளின் நுரையீரலை பாதிக்கிறது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் உலகபெருந்தொற்று நோயாக உருமாறி பல்வேறு பரிமாணங்களில் பரவி வருகிறது கொரோனா தொற்று. இந்த கொரோனா தொற்றை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கட்ட ஆராய்ச்சி சோதனைகளுக்கு பிறகு தடுப்பூசிகளை கண்டறிந்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்தனர். இருந்தும் தற்போது கூட புதியவகை கொரோனா வைரஸான KP.2 எனும் தொற்று கண்டறியப்பட்டு சிங்கப்பூரில் வேகமாக பரவி வரும் நிலை உருவாகியுள்ளது. இது மேலும் சில நாடுகளுக்கும் பரவி உள்ளது.

அமெரிக்கா, கொலம்பியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பரவல், அதன் பாதிப்பு மற்றும் சிகிச்சை வழிமுறைகள் என புதிய ஆய்வை மேற்கொண்டு அதனை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரணு சிதைவு/மரண பாதிப்பால் நோயாளியின் நுரையீரல் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்றும், இதனால், கடுமையான சுவாசக் கோளாறுகள் போன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நுரையீரல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் என பரிந்துரைத்துள்ளனர்.  உயிரணு சிதைவு எனப்து செல் மரணமாகும். அது ஒரு செல்லின் செயல்பட்டை முற்றிலும் நிறுத்தும் செயல். இயற்கையாகவோ, நோய் அல்லது காயம் போன்ற காரணங்களால் கூட ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரணு சிதைவு என்பது, செல்லின் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள இணைப்பை துண்டிப்பது. என்றும், இது மனிதர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போதோ அல்லது வயதாகும்போதோ நிகழ்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் மனித திசுக்களை பகுப்பாய்வு செய்தனர். கோவிட்-19 தொற்று காரணமாக சுவாச செயலிழப்பால் இறந்த நோயாளிகளின் பிரேத பரிசோதனை முடிவுகளையும் சேகரித்தனர். வெள்ளெலிகளின் மாதிரிகளும் இதில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. உயிரணு இழப்பு (Ferroptosis) மூலம் பெரும்பாலான செல்கள் இறக்கின்றன என்று குழு கண்டறிந்தது, இது கோவிட் நோயாளிகளுக்கு நுரையீரல் நோய் ஆதாரத்தை உருவாக்குகிறது.

எனவே, உயிரணு இறப்பின் ஃபெரோப்டோசிஸ் (Ferroptosis) நோயை குறிவைத்து தடுக்கும் மருந்துகள் கோவிட் -19 க்கான சிகிச்சைப் போக்கை மேம்படுத்த உதவும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்