கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க ரெடியாகும் வலிமை டீம் .!
வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை .எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது .அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.அதனை டிரெண்ட் செய்து நிம்மதியை தேடுகின்றனர்.
பைக் ரேஸ் காட்சிகளும், ஸ்டண்ட், காட்சிகளும் அதிகமுள்ள வலிமை படத்திலிருந்து ஏற்கனவே தல அஜித் பைக் ரேஸ் செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது பைக்கில் ரேஸ் செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனுடன் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை ஸ்பெயின் நாட்டில் நடத்த உள்ளதாகவும்,அங்கு கிளைமாக்ஸ் காட்சியான ஃபைட் சீன் ஒன்றை படமாக்க உள்ளதாகவும் , விரைவில் வலிமை படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Latest Exclusive Pics Of #ThalaAjith ????❤️#Valimai pic.twitter.com/YxGHOeF7Zp
— Kerala Ajith Fans – KAF (@KeralaAjithFC) February 7, 2021