தலயின் வலிமை படத்தின் மாஸ்ஸான அப்டேட்.!
படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து தீபாவளி தினத்தை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளது படக்குழு திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். எனவே ரசிகர்கள் பலர் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படம் ஏப்ரல் மாதத்தில் முதலில் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனால் கொரோனா தொற்று காரணமாக தீபாவளி காரணமாக தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் வலிமை பட பணிகளை கொரோனா பிரச்சினை அனைத்தும் முடிவுக்கு வந்த பின்னர் தொடங்கலாம் என்று கூறியுள்ளாராம் அஜித்.
இந்த நிலையில் அவரது ரசிகர்கள் பலர் கவலையில் உள்ளனர். இந்நிலையில் தற்போது வலிமை படக்குழுவினர் திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும், அதாவது படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து தீபாவளி தினத்தை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளது படக்குழு திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.