அந்நியன் திரைப்படத்தின் கதை தனக்கே சொந்தம் என்று இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலளித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்நியன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அந்நியன் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம் தான் முழு உரிமை இருக்கிறது. என்று ஷங்கருக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.
இதனை தொடர்ந்த்து இயக்குனர் ஷங்கர் தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து ஷங்கர் விளக்கம் அளித்திருப்பது ” அந்நியன் திரைப்படத்தின் கதை எனக்கு தான் சொந்தம். திரைப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம் என் பெயர் தான் இடம்பெற்றிருந்தது. சுஜாதாவை நான்தான் வசனம் எழுத அழைத்து வந்தேன். அந்நியன் திரைப்படத்தின் கதையை முழுமையாக பயன்படுத்தும் உரிமை எனக்கு உள்ளது “என்றும் தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…