இலங்கை:இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
இலங்கையில் அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால்,பால்,அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது.
ஜனாதிபதி,பிரதமர் பதவி விலக வேண்டும்:
இதன்காரணமாக,இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என எதிர்க்கட்சிகள்,பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.மேலும்,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று கூறி ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
26 அமைச்சர்கள் ராஜினாமா:
இவ்வாறான பரபரப்பான சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கேபினட் அமைச்சர்கள் 26 பேர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொணடார்.மேலும்,மத்திய வங்கி ஆளுநரும் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய இடைக்கால அமைச்சர்கள்:
அதன்பின்னர்,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நான்கு புதிய இடைக்கால அமைச்சர்களை நியமித்தார்.அதன்படி,அலி சப்ரியை புதிய நிதி அமைச்சராகவும்,வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸும், புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும்,புதிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக ஜான்ஸ்டன் பெர்னாண்டோவவையும் ஜனாதிபதி நியமித்தார்.
மேலும்,நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார்.ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கூடும் நாடாளுமன்றம்:
இந்நிலையில்,இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.அதன்படி,இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சேவுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வெடிக்கும் நிலையில் அவர் பதவியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.எனவே,நாடாளுமன்றம் இன்று கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…