அதிர்ச்சி…இன்று முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல் -அரசு அறிவிப்பு!
இலங்கை:இன்று முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து இருப்பதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் தமிழ் மக்கள்:
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களின் விலையும் கூட பல மடங்கு அதிகரித்துள்ளதால் மூன்று வேளை உணவு உண்பதற்கு கூட மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத சூழலில் மக்கள் பலர் அகதிகளாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முதல் 10 மணி நேர மின்வெட்டு:
இதனிடையே,எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் 6 மணி முதல் 8 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,இன்று முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க மின்சார வாரியம் வலியுறுத்திய நிலையில்அதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணையக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால்,தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும், மின்வெட்டு நேரம் அதிகரிப்பு இலங்கை மக்களை இருள் சூழ்ந்த வாழ்க்கைக்கு தள்ளியுள்ளது.