இலங்கையில் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்படும் சூழல் ஆரம்ப காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.
இந்நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டது.இந்த குண்டு வெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்தான் காரணம் என்று பின்னர் தெரியவந்தது.இந்த காரணத்தை வைத்து, இலங்கையில் புர்கா அணிவது தற்காலிகமாக தடை செய்யப்படிருந்தது.
இதனையடுத்து,புர்கா அணிவதை நிரந்தரமாக தடை செய்வது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.மேலும்,இந்த ஆடை நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு நேரடியாகவே அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது,நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஸ்லீம் பெண்கள் பொதுவெளியில் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…