முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை – இலங்கை அரசு உத்தரவு..!

Default Image

இலங்கையில் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்படும் சூழல் ஆரம்ப காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

இந்நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டது.இந்த குண்டு வெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்தான் காரணம் என்று பின்னர் தெரியவந்தது.இந்த காரணத்தை வைத்து, இலங்கையில் புர்கா அணிவது தற்காலிகமாக தடை செய்யப்படிருந்தது.

இதனையடுத்து,புர்கா அணிவதை நிரந்தரமாக தடை செய்வது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர  அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.மேலும்,இந்த ஆடை நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு நேரடியாகவே அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது,நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஸ்லீம் பெண்கள் பொதுவெளியில் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்