7 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட ‘காத்தோடு காத்தானேன்’பாடல்.!

Published by
Ragi

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் 7மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள ‘காத்தோடு காத்தானேன் ‘ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல இதயங்களை கொள்ளை கொண்ட இந்த பாடல் வெளியாகி தற்போது 7மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.மேலும் நாளை இந்த படத்திலிருந்து செக்கன்ட் சிங்கிளான ‘பத்துக்காசு’ என்ற பிரண்ஷிப் பாடல் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Ragi

Recent Posts

ஜப்பானின் டொரிஷிமா தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

ஜப்பானின் டொரிஷிமா தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப்…

6 minutes ago

மீண்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! முக்கிய தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்!

ஈரோடு :  இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி…

24 minutes ago

பிப்ரவரி 5-ல் டெல்லி தேர்தல்.! வேட்புமனு தாக்கல்., வாக்கு எண்ணிக்கை தேதிகள் இதோ…

டெல்லி :  தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…

49 minutes ago

HMPV தொற்று எதிரொலி : மீண்டும் முகக்கவசம்., நீலகிரியில் கட்டாயம்!

நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…

1 hour ago

”அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்” சட்டென முகம் மாறி காட்டமாக பேசிய ரஜினிகாந்த்ஜினிகாந்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…

2 hours ago

நேபாளம்: காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி…. மிண்டும் நில அதிர்வு!

நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…

2 hours ago