100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “ஈனா மீனா டீக்கா” பாடல்..!!
தெறி படத்தில் இடம்பெற்றிருந்த “ஈனா மீனா டீக்கா” பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் தெறி. இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் 150கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “ஈனா மீனா டீக்கா” பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடலை பா விஜய் மற்றும் அருண் ராஜ் காமராஜ் எழுதியிருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் உத்தாரா உன்னி கிருஷ்ணன் இருவரும் பாடினார்கள். சமீப காலமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களின் பாடல்கள் யூடியூபில் பலத்த வரவேற்பது பெற்று வருகிறது. இதனால் தளபதி 65 படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.