மணம் கமழும் பெப்பெர்கோர்ன் ஃபிஷ் செய்வது எப்படி
மீனை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.அந்த வகையில் மீனை வைத்து ஆரோக்கியமாக எப்படிசமைப்பது என்பதை பார்க்கலாம்.
- பெப்பெர்கோர்ன் ஃபிஷ் செய்வது எப்படி?
மணம் கமழும் பெப்பெர்கோர்ன் ஃபிஷ் எப்படி செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்:
முள்ளில்லாத மீன்துண்டு – 3
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
குடை மிளகாய் – 6 டீஸ்பூன், பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு – 1 டீஸ்பூன்
அடித்த முட்டை – 6 டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
முதலில் மீனை முள்ளில்லாமல் சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.ஒரு கிண்ணத்தை எடுத்து எலுமிச்சை பழம் சாறு, முட்டை, உப்பு, மிளகு தூள், குடைமிளகாய் , இஞ்சிபூண்டு விழுதுசேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதில் மீன் துண்டுகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், ஊற வைத்த மீன்களை ஒரு வாழை இலையில் சுருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி அடுப்பில் வைத்து அவிக்கவும். 10 நிமிடங்கள் கழித்து , வாழை இலையை எடுத்து விட்டு மீனை ஒரு தட்டில் வைத்து சூடாக பரிமாறவும் இப்போது சூடான பெப்பெர்கோர்ன் ஃபிஷ் ரெடி.