சூர்யாவின் அணுகுமுறை நன்று- வைரமுத்து.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கவியரசு வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
நடிகை மீரா மிதுன் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததார். இதற்கு ரசிகர்கள் மீராவை கடுமையாக விளாசி வந்த நிலையில் நேற்றைய தினம் நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்தார் அதில் “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என கூறியிருந்தார்.
சூர்யா கூறிய இந்த கருத்துக்காக பலதரப்பில் இருந்து அவருக்கு பாராட்டு வந்தது, இந்நிலையில் அந்த வகையில் தற்பொழுது கவியரசு வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார், அதில் வைரமுத்து கூறியது “சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று பக்குவப்பட்டவர்கள் பதற்ற முறுவதில்லை பாராட்டுகிறேன், நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை, என்று பதிவு செய்துள்ளார்.
சுமத்தப்பட்ட பழியின்மீது
சூர்யாவின் அணுகுமுறை நன்று.
பக்குவப்பட்டவர்கள்
பதற்றமுறுவதில்லை;
பாராட்டுகிறேன்.
நதியோடு போகும் நுரையோடு
கரை கைகலப்பதில்லை.@Suriya_offl— வைரமுத்து (@Vairamuthu) August 12, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!
February 13, 2025![PM Modi USA Visit](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/PM-Modi-USA-Visit.webp)
மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு..அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
February 13, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-1-1.webp)