செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தினை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் செந்தில் .இவரும் , நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த படங்கள் யாவும் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.இவர்களின் காம்போக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு . நடிகர் செந்தில் கடைசியாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எனும் படத்தில் நடித்திருந்தார்.
இதுவரை எந்த படத்திலும் ஹீரோவாக நடிக்காத செந்தில் தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளார் .நடிகர் செந்தில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தினை சுரேஷ் சங்கையா இயக்குகிறார்.இவர் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு ஆயுள் தண்டனை குற்றவாளியாக செந்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.இதுவரை பெயரிடப்படாத இந்தப் படத்தினை சமீர் பாரத் ராம் தயாரிக்க ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Shoot begins for the untitled film starring legendary actor #Senthil
directed by #orukidayinkarunaimanu fame #sureshsangaiah produced by @sameerbr @supertalkies @onlynikil #NikilMurukan #NMNews23 #NM pic.twitter.com/cbOCuqt1Hx— Ramesh Bala (@rameshlaus) February 1, 2021