” Walmart ” மாலில் நடந்த துப்பாக்கி சூடு..இரண்டு பேர் பலி.!

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ சிட்டியில் உள்ள வால்மார்ட் விநியோக மையத்திற்குள் துப்பாக்கியை ஏந்தி வந்த நபர், திடீரென தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர்.
ஏ.ஆர் வகை துப்பாக்கி ஏந்திய நபர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது வால்மார்ட் சுவரில் மோதிய பின்னர் வாகனம் தீப்பிடித்த பிறகு, அந்த நபர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார் என தகவல் வெளியானது. காயமடைந்த நான்கு பேரும் தற்போது புனித எலிசபெத் சமூக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்தியவர் தனது காயங்களில் இருந்து தப்பினாரா என்பது தெரியவில்லை. இந்த மையத்தில் உள்ள ஊழியர்கள் ஊடகங்களிடம் சுமார் 200 தொழிலாளர்களுடன் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவித்தனர். அவர்களில் சிலர் தங்களை ஒரு அறையில் பூட்டிக் கொண்டு தப்பித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025