இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 11 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, விஜய் டிவி புகழ், வினய் என பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனை சூரி, புகழ் அண்மையில் எதற்கும் துணிந்தவன் சிறப்பு நிகழ்ச்சியில் அவர்களே சொல்லிவிட்டனர். அது என்னவென்றால், புகழ் படப்பிடிப்பு கடைசி நாளன்று சூரியிடம், அங்கு ஒரு நீச்சல் குளம் இருக்கிறது வாருங்கள் அங்கு ஒரு வீடியோ எடுக்கலாம் என கேட்டுள்ளார். சூரி அதற்கு முதலில் மறுத்து அடுத்து உடனே ஓகே சொல்லியுள்ளார்.
அடுத்ததாக புகழ்சூரியிடம் போனை தண்ணீருக்குள் வைத்து ஷூட் செய்வோம் என கூறியுள்ளார். அதற்கும் சூரி முதலில் மறுத்து பின்னர் ஓகே சொல்லியுள்ளார். ஆனால், தண்ணீருக்குள் சூரியின் போன் விழுந்துவிட்டது. அதன் பிறகு, புகழ் போனும் அதில் விழுந்துவிட்டது.
முதலில் புகழ் போன் வேலை செய்யவில்லை. அடுத்ததாக சூரி ரூமுக்கு சென்று அவருடைய போனை ஆன் செய்தார் , அவருடைய போனும் வேலை செய்யவில்லையாம். மேலும், சூரி ஒன்றரை லட்சம் மதிப்புள்ள அந்த போனை ஒரு 6 நாள் முன்னர் தான் வாங்கியுள்ளார். அதனால் அங்கு நிகழ்ச்சி நடக்கும் போதே, உன்னால தான்டா என் ஒன்றரை லட்சம் ரூபாய் போன் போச்சி என அன்பாக சிரித்து கொண்டே பேசியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…