அடுப்பில் வைத்து எரிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோகி!!வெளியான அதிர்ச்சி தகவல் !!!
- அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
- துணை தூதரின் இல்லத்தில் அடுப்பில் வைத்து பத்திரிகையாளர் ஜமால் கசோகி எரிக்கப்பட்டார்.
சவுதி அரேபியாவை சேர்ந்த ஜமால் கசோகி இவருக்கு 59 வயது ஆகிறது. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தார். அவர் எழுதிய கட்டுரைகளில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பற்றியும்.
அவரின் மன்னர் ஆட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார் ஜமால் கசோகி .இந்நிலையில் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி தனது பாஸ்போர்டை புதுப்பிக்க வந்தார்.
அப்போது அவர் கொலை செய்யப்பட்டார் என துருக்கி அரசு கூறியது.ஆனால் சவுதி அரசு இதை மறுத்தது .ஜமால் தூதரகம் வந்து சென்றதற்கான சி.சி.டி.வி. ஆதாரங்களை வெளியிடவும் சவுதி அரசு மறுத்தது.
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு கடந்த 2-ம் தேதி சவுதி அரேபிய அரசு ஒப்புக்கொண்டது.சண்டையில் ஏற்பட்ட மரணம் என்று தெரிவித்தது.
பின்பு சவுதியில் இருந்து அனுப்பப்பட்ட குழு அவரை கொன்றது என தெரிய வந்தது.
இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதமன தொடர்பும் இல்லை என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துணை தூதரின் இல்லத்தில் அடுப்பில் வைத்து பத்திரிகையாளர் ஜமால் கசோகி எரிக்கப்பட்டார். எனஅதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக அல் ஜஸீரா தொலைக்காட்சி நடத்திய விசாரணையில் சவுதி துணை தூதரின் இல்லத்தில் சமீபத்தில் கொதி உலை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அந்த உலை சுமார் 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாங்கக்கூடியது. இந்த பணிகளை துருக்கிய அதிகாரிகள் கண்காணித்தார்கள் என்று கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் அல் ஜஸீரா தொலைக்காட்சி விசாரணையில் தெரிவித்துள்ளார்.