62 நாட்கள் கோமாவில் இருந்த இளைஞனிடம் சிக்கன் பெயரை சொன்னதும் எழுந்த அதிர்ச்சி சம்பவம்.!
சாலை விபத்துக்கு பின் 62 நாட்கள் கோமா நிலையில் இருந்த 18 வயது இளைஞனுக்கு பிடித்த உணவான “சிக்கன் ஃபில்லட்” சொற்களைக் உறவினர்கள் சொன்னதும் திடீரென எழுந்துவிட்டார்.
இந்த சம்பவம் தைவானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த 18 வயது இளைஞன் தனது ஸ்கூட்டரில் ரரைடு செய்யும் போது விபத்து ஏற்பட்டதால் ஆறு ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்ததால் அவர் ஆழ்ந்த கோமாவில் சென்றுள்ளார்.
இதனையடுத்து , அவரது கோமாவின் 62 வது நாளில் அவரது மூத்த சகோதரர், “சகோதரரே, நான் உங்களுக்கு பிடித்தசிக்கன் ஃபில்லட்டை சாப்பிடப் போகிறேன்’ என்று கேலி செய்தார். இதனை, கேட்ட கோமாவில் இருந்தவர் சுயநினைவை மீண்டும் பெறத் தொடங்கினார் என்றும் அவரது முக்கிய அறிகுறிகள் உறுதிப்படுத்தத் தொடங்கியதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.
இறுதியில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, அவர் குணமடைந்ததைப் பாராட்டிய மருத்துவ குழுவுக்கு நன்றி தெரிவித்து வீட்டிற்கு திரும்பினார்.