மேசக் புயல்: கப்பல் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு…!
மேசக் புயல் கடக்கும்போது கல்ப் லைவ் ஸ்டாக் என்ற கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன் கிழமை நள்ளிரவு 1 மணியளவில் மேசக் என்ற புயல் வீசியது. இதில் வரலாறு காணாத விதமாக, மணிக்கு கிட்டத்தட்ட 210 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இந்த புயலால் ஜப்பான் மற்றும் கொரிய தீபகற்பத்தில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களை சேதமடைந்தது.
இந்தநிலையில், இந்த மேசக் புயல் கடந்து செல்லும்போது நியூசிலாந்து நாட்டில் உள்ள நேப்பியர் துறைமுகத்தில் இருந்து கல்ப் லைவ் ஸ்டாக் என்ற கப்பல், 43 ஊழியர்கள் மற்றும் 6 ஆயிரம் கால்நடைகளை கொண்டு சீனாவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது புயல் கடக்கும்போது இந்த கப்பல் கடலில் மூழ்கியது.
இந்த கப்பலில் பயணம் செய்த 43 பணியாளர்களில் இரண்டு பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த கப்பல் நியூசிலாந்திலிருந்து 5,800 மாடுகளை சீனாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.