செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு சாணிக் காயிதம் படக்குழுவினர் மிரட்டலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கி வரும் வரும் இவர் ஹீரோவாகவும் பாடிக் காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியதும் அதில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டதும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு சாணிக் காயிதம் படக்குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் செல்வராகவன் ஒரு கையில் துப்பாக்கியுடன் உட்கார்ந்திருக்க மறு கையால் புகைப்பிடித்தபடி உள்ளார்.அவரின் முன்பு கால் கட்டுடன் ரத்த வழிந்தபடி சடலம் ஒன்று உள்ளது . ஏற்கனவே சாணிக் காயிதம் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வெளியான இந்த மிரட்டலான போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…