விடாமுயற்சி.. விஸ்வரூப வெற்றி..! 40வது முறையில் கூகுள் வேலையை தட்டி தூக்கிய தன்னம்பிகை மனிதர்.!
39 முறைமுயற்சி செய்து நிராகரிக்கப்பட்டு, மீண்டும் முயற்சி செய்து கூகுள் கம்பெனி வேலையை வாங்கியுள்ளார் ஒரு நபர்.
பலருக்கும், நன்றாக படித்து, நல்ல பெரிய கம்பெனியில் சேர வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். சிலர் ஒரு பெரிய உலக புகழ் பெற்ற கம்பெனியை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்தே தீர வேண்டும் என கடுமையாக முயற்சி செய்வார்கள்,
ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை என்றால் அந்த எண்ணத்தை விட்டு, வேறு கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிடுவர்.
ஆனால், ஒரு நபர் கூகுள் கம்பெனியில் வேலை சேர வேண்டும் என்று முயற்சித்து, 39 முறை நிராகரிக்கப்பட்டுள்ளார். இருந்தும் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து தனக்கு பிடித்த கூகுள் வேலையை வாங்கிவிட்டார்.
டைலர் கோஹன் என்பவர் கூகுள் கம்பெனியில் டெக்னிக்கல் பணியில் சேர்வதற்கு விண்ணப்பித்து 39 முறை நிராகரிக்கப்பட்டு, பின்னர் தேர்வாகியுள்ளார். இதனை தனது லின்கிட் இன் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.