1000 கொசுக்களுக்கு உணவாக தினமும் தனது கையை கொடுக்கும் விஞ்ஞானி!
1000 கொசுக்களுக்கு உணவாக தினமும் தனது கையை கொடுக்கும் விஞ்ஞானியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
சாதாரணமாக ஒரு கொசு நமக்கு கடித்தாலே கொசு கடித்து விட்டது என்று அடித்துவிட்டு பலமுறை அந்த இடத்தை சொரிந்து கொண்டே இருப்பதுதான் மனிதர்களாகிய நமது வழக்கம். இந்த கொசுவால் ஒரு நிமிட வலி மட்டுமல்ல மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா வைரஸ் மற்றும் மஞ்சள் காமாலை என பல்வேறு நோய்கள் வருகிறது. இதனால் பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளும் இந்த கொசுக்கள் மூலம் பரவக்கூடிய நோய்களை தடுப்பதற்கான வழிகளாக பல்வேறு முறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சில விஞ்ஞானிகள் மட்டும் தாங்கள் செய்யக்கூடிய ஆராய்ச்சி வேலைகளில் முழு அர்ப்பணிப்பும் துணிச்சலும் கொண்டு வேலை செய்கின்றனர்.
அவ்வகையில் டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தக்கூடிய பணியில் ஈடுபட்டுள்ள பூச்சியியல் வல்லுநர் பெரோன் ரோஸ் எனும் விஞ்ஞானி ஆயிரக்கணக்கான கொசுக்களை தனது கையைவிட்டு வேண்டுமென்றே தினமும் அவைகளுக்கு தனது கை இரத்தத்தை உணவாக அளித்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கொசுக்கள் இனப்பெருக்கம் மற்றும் ஆய்வக தழுவல் பற்றிய ஆய்வு தற்போது முடிந்து விட்டதாகவும், தனது கை குறித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தினமும் ஒரு நேரத்தில் 250 பெண் கொசுக்களுக்கு தான் உணவளிப்பதாகவும், ஆயிரக்கணக்கான கொசுக்களுக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் உணவு அளித்த பிறகு தனது கை மிகவும் சூடாகி முழுமையாக மூடப்பட்டிருக்கும் எனவும் ரோஸ் அவர்கள் கூறியுள்ளார். இந்த இந்த ஆராய்ச்சியின் மூலம் என்ன கண்டுபிடிப்பு இருக்கப்போகிறது என்பது விஞ்ஞானி மட்டுமே அறிந்தது. நமக்கு அது பற்றி தெரியாவிட்டாலும் இத்தனை கொசுக்களை ஒரே நேரத்தில் அவர் கைகளில் கடிக்க விடக் கூடிய செயல் நம்மளையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறது.
Our study on inbreeding and laboratory adaptation in mosquitoes is out now! https://t.co/AnE8KU5aJR pic.twitter.com/ckUadL6ChD
— Perran Ross (@MosWhisperer) November 28, 2018