கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோ ட்ரோன் காட்சிகள் மூலம் ரஷ்யாவில் உள்ள மேற்கு சைபீரியாவின் லியோவிகா அருகே ஒரு ஆரஞ்சு நிறத்தில் இருந்த நிலத்தை காட்டியது.
இதையெடுத்து, பின்னர் நடத்திய விசாரணையில் அது நிலம் அல்ல ஆறு என்பது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத செப்பு-சல்பைட் சுரங்கத்தில் உள்ள கழிவுகள் அங்குள்ள குளங்களில் சேமிக்கப்பட்டிருந்தன, ஆனால், ரஷ்யாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த குளங்களில் இருந்த கழிவுகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நீர் அங்குள்ள ஆறுகளில் கலந்ததால் தண்ணீர் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட கடுமையான சேதங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆண்ட்ரி வோலெகோவ் கூறுகையில், (ஈகோபிராவோ என்ற அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிகிறார்) கடந்த ஆண்டு இந்த கழிவுநீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளை எச்சரித்தார் என அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவில் கடந்த மாதம் சைபீரியா மாகாணத்தில் மிகப்பெரிய மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் இருந்து ஏற்பட்ட கசிவு காரணமாக 20,000 டன் எண்ணெய் அருகில் இருந்த அம்பர்ன்யா நதியில் கலந்தது.
இந்த எண்ணெய் கசிவால் 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றை மாசுபடுத்தியது என்பது குறிப்பித்ததக்கது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…