S12 திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும் செல்வராகவன்!

இன்று மாலை 7:10 மணிக்கு S12 திரைப்படம் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள நிலையில், தமிழில் காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம், முதன்முதலில் இயக்குனராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இன்று மாலை 7:10 மணிக்கு S12 திரைப்படம் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
The tale starts now ????@dhanushkraja @theVcreations @thisisysr @Arvindkrsna pic.twitter.com/xWF0EqCaQp
— selvaraghavan (@selvaraghavan) January 12, 2021