தைவானிலிருந்து ஜப்பானுக்கு விமானத்தில் சென்ற காண்டாமிருகம்..!-இதுதான் காரணம்..!
தைவான் நாட்டில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டிற்கு விமானம் வழியாக அழைத்து சென்றுள்ளனர்.
தைவான் நாட்டின் உயிரியல் பூங்காவில் வெள்ளை நிற பெண் காண்டாமிருகம் வாழ்ந்து வருகிறது. என்மா என்ற பெயருடைய இந்த பெண் காண்டாமிருகத்திற்கு 5 வயது ஆகிறது. ஆனால், இந்த காண்டாமிருகம் இனப்பெருக்கம் செய்வதற்கு அங்கு ஆண் காண்டாமிருகம் இல்லை. இதன் காரணத்தால் இந்த விலங்கினத்தை காப்பாற்றும் முயற்சியில் தைவான் ஈடுபட்டுள்ளது.
இதனால் இந்த காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு இனப்பெருக்கத்திற்காக அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதன்படி, தைவானின் என்மா என்ற காண்டாமிருகத்தை விமானம் வழியாக 2,160 கி.மீ. பயணம் செய்து ஜப்பானின் டொபு உயிரியல் பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு 10 வயதுடைய மொரான் என்ற ஆண் காண்டாமிருகம் இருப்பதால் இனப்பெருக்கம் முடிந்து, என்மா காண்டாமிருகம் கர்ப்பம் அடைந்த பின் மீண்டும் தைவானுக்கு அழைத்து வரப்படும் என்று கூறியுள்ளனர்.