அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் சலார் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில்நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தினையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம், இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆம் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
???????????????????????????????????? Worldwide #Salaar On ???????????????????? ????????, ???????????????? ????
We can’t wait to celebrate with you all ????#Salaar14Apr22#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/tQ3B1jbdt1
— Hombale Films (@hombalefilms) February 28, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025