தந்தையின் ட்ராக்ட்டரை அபகரித்த உறவினர்..! டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து புகாரளித்த சிறுமி..!
தந்தையின் ட்ராக்ட்டரை அபகரித்த உறவினரை, டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகாரளித 14 வயது சிறுமி.
ஈரோடு மாவட்டம், வைராபாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தர்சனா. இவரது தந்தை கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அவரது தந்தையின் டிராக்டரை, தனக்கு கடன் கொடுக்க வேண்டும் என பொய் சொல்லி, அவர்களது உறவினரான பூபாலன் என்பவர் டிராக்ட்ரை அபகரித்து வைத்துள்ளதாகவும், தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் தன்னை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, 14 வயதே ஆன தர்சனா, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தர்சனா. தனது தந்தை இறந்த நிலையில், இந்த டிராக்டரை வைத்து தான் ஹான் படிக்க வேண்டும் என்றும், பள்ளி தொடங்கியுள்ள நிலையில், நான் பள்ளிக்கு செல்லாமல் காவல்நிலையங்களுக்கு அழைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.