7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைக்கும் காடன் டிரைலர்..!
காடன் திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் ராணா மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் புல்கிட் சாம்ராட், டின்னு ஆனந்த், அஸ்வின் ராஜா, சோயா ஹுசைன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு உலகம் முழுவதும் உள்ள காட்டு பகுதியில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்திற்கான படப்பிடிக்கு முடிந்து கடத்த ஆண்டே இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட காரணத்தால் வெளியாகவில்லை.
அதற்கு பிறகு கடந்த மாதம் இந்த திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். மேலும் படத்திற்கான டிரைலர் கடந்த 3 ஆம் தேதி வெளியானது, வெளியாகி தற்போது யூடியூபில் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
7 MILLION+ views for the trailer of #Kaadan ????♥️
Watch it again – https://t.co/gB0eM1djsC
Releasing in THEATRES on the 26th of March ????#SaveTheElephants @RanaDaggubati #PrabuSolomon @zyhssn @ShriyaP @ErosSTX @ErosMotionPics @ErosNow pic.twitter.com/cjC4IG9UPb
— VISHNU VISHAL – V V (@TheVishnuVishal) March 8, 2021