நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் மகேஷ்பாபு நடித்துள்ள ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மகேஸ்பாபுவிற்கு அம்மாவாக நடித்துள்ளார்.
விஜயசாந்தி 13 வருடத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் , என்னை இப்படத்தில் நடிக்க சொல்லி தொடர்ந்து அழைப்பு வந்தது. ஆனாலும் நல்ல கதை இல்லாததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தேன்.
தற்போது மகேஷ்பாபு நடித்த இந்த படத்தில் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க சம்மதித்தேன். அரசியல் தான் எனக்கு முக்கியம் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பேன் என கூறினார்.
மேலும் குழந்தை எனக்கு பிடிக்கும் ஆனால் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்துவிடும் அரசியலுக்கு வந்த பிறகு சுயநலம் இல்லாமல் இருந்தால்தான் பொதுத் தொண்டு செய்ய முடியும் எனவே குழந்தை வேண்டாம் என முடிவு செய்தேன்.
இதை என் கணவரிடம் சொன்னேன் அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவுக்கும் குழந்தை ,குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தவர் என கூறினார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…