தி ரீயல் ஹீரோ – 3 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி உதவும் சோனு சூட்.!

நடிகர் சோனு சூட் அடுத்ததாக 3 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட், சமீபத்தில் கூட மகள்களை வைத்து ஏர் உழும் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தும், ஊரடங்கால் வேலையிழந்த சாப்ட்வேர் என்ஜீனியரான பெண்ணிற்கு புது வேலை வாங்கி கொடுத்தும் உதவினார் .
இந்த நிலையில் தற்போது இவர் அடுத்ததாக 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோனு சூட் தனது பிறந்தநாளை முன்னிட்டு வேலையின்றி அவதிப்படும் 3 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு நல்ல சம்பளம், இன்சூரன்ஸ் ஆகியவையும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உதவி செய்து வரும் ஹீரோவான சோனு சூட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025