இனி புஷ்பா ஆட்டம் முதலில் இருந்து ஆரம்பம்..! ஜூலை முதல் பரபர ஷூட்டிங்….
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் அருமையாக இருந்ததால், 50 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி 350 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
இதையும் படியுங்களேன்- தமிழகத்தில் விக்ரம் படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?
இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை எழுதும் பணியை இயக்குனர் சு.குமார் முடித்துவிட்டாராம். அதன்படி, வரும் ஜூலை மாதத்திலிருந்து புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லையாம். விரைவில் படத்தை தொடங்க திட்டமிட்டு, டிசம்பரில் படமாக்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில் இடையேயான மோதல் அதிகம் இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. முதல் பாகம் அருமையாக இருந்ததால் இரண்டாவது பாகத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.