முகம் பளபளப்பாக செய்ய வேண்டிய வழிமுறைகள் .,
வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். அவ்வாறு செய்வதினால் மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும்.
வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.பின்பு அரை மணி நேரம் ஆன பிறகு சுத்தமான நீரில் கழுவி விடலாம். இதனை செய்வதால் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்லாமல் சரும சுருக்கங்கள் வராதsவாறு தடுத்திடும். கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது. .
பன்னீரும் சந்தனமும் அரைத்து அதனை உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சேர்த்து முகத்தில் தடவ தோலின் நிறம் நன்கு பொலிவு பெறும். சருமம் அழகாக மற்றும் பளபளப்பாக மாற பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் நன்கு பயன் தரும் .