திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பிரதமர் உறுதி..

Default Image

ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு பிரேசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதையெடுத்து இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற  ஜூலை 24-ம்  தேதி தொடங்கி ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் சீனாவில் உருவான கொரோனா  என்ற கொடூரன்  உலகம் முழுவதும் 120-க்கும் மேற்ப்பட்ட  நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. 

கொரோனா ஜப்பானிலும் பரவியதால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ..? அல்லது நடைபெறாத ..? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என டிரம்ப் தனது கருத்தை கூறியிருந்தார்.

இந்நிலையில் டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.   ஒலிம்பிக் போட்டி எந்த தாமதமும் , ஒத்திவைப்பும் இருக்காது என கூறினார். இவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்