புதிய பாகிஸ்தானை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியில் பாகிஸ்தான் மோசமான நிலையில் உள்ளது.அந்த நாட்டின் பணவீக்கம் அழிவை உருவாக்கியுள்ளது.முட்டை மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் விண்ணுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு முட்டையின் விலை ரூ. 30, ஒரு கிலோ சர்க்கரை ரூ. 104 , ஒரு கிலோ கோதுமை ரூ.60 மற்றும் ஒரு கிலோ இஞ்சி 1000 ரூபாய் என்ற விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு சர்க்கரை விலையை குறைத்ததாக பிரதமர் இம்ரான் கூறினாலும் , பாகிஸ்தானின் பணவீக்கம் அனைத்து பதிவுகளையும் உடைத்துவிட்டது. பாகிஸ்தானின் முன்னணி செய்தித்தாள் , நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் தேவை அதிகரித்து வருவதால் முட்டையின் விலை ஒரு டசனுக்கு 350 பாகிஸ்தான் ரூபாயாக (சுமார் 160 இந்திய ரூபாய்) உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 25% க்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். இந்த மக்கள் தங்கள் உணவில் பெரிய அளவில் முட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நாட்டின் நிலைமை மோசமடையத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அப்போது கோதுமை 40 கிலோ ரூ. 2000 ஆகும் .இப்போது, 40 கிலோ கோதுமை ரூ. 2400 ஆகும்.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…