தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது .
ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதில் எஸ்ஜே சூர்யா ,மகிழ் திருமேனி, பேரரசு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிப்பட்டது.அதிலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டிருந்தது.இயக்குநர் நெல்சன் இயக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தளபதி விஜய்யின் 65-வது படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் , வில்லனாக பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
“டார்கெட் ராஜா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் நெல்சன் இயக்குவதாகவும், அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .ஆனால் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . தளபதி 65 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே தளபதி விஜய்யின் கத்தி மற்றும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியென்றால் ரசிகர்களுக்கு டபிள் விருந்து தான் .
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ்…
ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில்…
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…
சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…