புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலை! இணையத்தில் வைரலாகும் மனதை உருக்கும் வீடியோ!
ஊரடங்கு உத்தரவால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பாராவை வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்த வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில், புலம் பெயர் தொழிலாளர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கையில், தாய் ஒருவர் தனது குழந்தையை சூட்கேஸில் வைத்து அதில் உள்ள வீல்கள் உதவியோடு தனது குழந்தையை சுமந்து செல்கின்றார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், தனது குழந்தையை சூட்கேசில் படுக்க வைத்து, அழைத்து செல்லும் வீடியோ பார்ப்போரை காண்கலங்க வைத்துள்ளது.