சென்னை : 80 கிலோ எடையை தூக்கிய பளு வீரர் உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவில் பளு தூக்கும் வீரர் ஒருவர் பளு தூக்கிய சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவில் 80 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒருவர் 80 கிலோ எடையை கொண்ட அந்த பளுவை சற்று தூக்க முடியாமலே தூக்கி கொண்டு இருந்தார்.
இரண்டு முறை தூக்கிவிட்டு கீழே வைத்தார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் கைதட்டி அந்த நபரை உற்சாகமும் செய்தனர். ஆனால், பளுவை தூக்கிவிட்டு கீழே வைத்த சில நொடிகளிலே திடீரென அப்படியே கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பான அதிர்ச்சி வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பத்திரிகையாளர் மரியோ நவ்ஃபல் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு ” ஒரு அனுபவம் வாய்ந்த ரஷ்ய (பளு வீரர் ) பவர்லிஃப்ட்டர் ரஷ்யாவின் டியூமனில் நடந்த ஒரு வலிமையான போட்டியில் 80 கிலோ தூக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்” என பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…