மருத்துவர் மற்றும் நோயாளிடம் சென்ற விமானம் தீப்பிடித்து எரிந்தது.!
பிலிப்பைன்ஸின் மணிலா விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் ஹனெடாவுக்கு பதிவு எண் RP-C5880 ஐக் கொண்ட ஒரு ஜெட் விமானம் இன்று இரவு 8 மணியளவில் மருத்துவ சிகிக்சைக்காக ஒரு நோயாளியை அழைத்து செல்ல இருந்தது.
WATCH: An aircraft reportedly carrying medical supplies caught on fire while it was about to take off at Ninoy Aquino International Airport (NAIA) around 8 p.m. According to BFP, fire was already out at 9:02 p.m. @inquirerdotnet (Sourced video) pic.twitter.com/8w38t1qVTi
— Dexter Cabalza (@dexcabalzaINQ) March 29, 2020
இந்த விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டு இருந்த போது தீப்பிடித்து வெடித்தது. இதையெடுத்து தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விமானத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு நோயாளி உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் இருந்தனர். விமானத்தில் இருந்த நோயாளி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாரா..? என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.
மணிலா சர்வதேச விமான நிலைய ஆணையம் சார்பில் வெளியான தகவல் படி எந்த பயணிகளும் தப்பவில்லை என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பிலிப்பைன்ஸில் இதுவரை கொரோனாவால் 1,418 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோயால் இதுவரை 71 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜெட் விமானம் பிலிப்பைன்ஸ் தீவுகளைச் சுற்றி மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.மேலும் இந்த வார தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறையின் முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது.அதில் சுகாதார அதிகாரிகள் விமானத்தில் மருத்துவ பொருட்களை ஏற்றுவதைக் காட்டியது.