அவள் இருக்கும் இடம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் என்று கூறி தனது இரங்கலை சித்ராவின் குடும்பத்தினருக்கு வெங்கட் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது .
மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை சித்ரா தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் . இதுகுறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சித்ராவின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகை, நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் அவர்கள் கண்ணீருடன் சித்ராவின் மறைவு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.அதில் இந்த செய்தி வெறும் கனவாக இருக்க கூடாதா என்று நினைப்பதாகவும்,ரொம்பவே தைரியமான பெண் அவர் . அப்படிப்பட்டவர் எப்படி ஒரு முடிவை எடுத்திருப்பாள் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் அவரின் முகத்தில் சிரிப்பு எப்போதும் இருக்கும் . அவர் அம்மா அப்பாவிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பது தெரியவில்லை.அதை விட 2 வருடம் ஒன்றாக பணிபுரிந்துள்ளோம் .அவர் மறைவு செய்தி கேட்டு கை ,கால்கள் எல்லாம் நடுங்குவதாகவும்,மனது பாரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் சித்து ஏன் இப்படி பண்ண என்று கேட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…