கொரோனாவால் வேலையிழந்த விமானியின் நூடில்ஸ் கடை.
கடந்த 8 மாத காலமாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்புநிலை திரும்பி வந்தாலும், இந்த ஊரடங்கால், வேலையிழந்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக தான் உள்ளது.
ஆனால், வேலையிழந்த பலர் மற்ற வேலைகளை தேடி செல்கின்றனர். அந்த வகையில், மலேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலையிழந்து விமானி ஒருவர் நூடுல்ஸ் கடை ஒன்று தொடங்கி உள்ளார்.
மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த 2 ஆயிரம் ஊழியர்களை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இந்த 2 ஆயிரம் பேரில், விமானி அஸ்ரின் மொஹமட் சவாவியும் ஒருவர். இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், விமானி அஸ்ரின் மொஹமட் சவாவி, மனம் தளராமல், தலைநகர் கோலாலம்பூரில் சிறிய நூடில்ஸ் கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.
இந்த கடையில் அவர் வியாபாரம் செய்யும் பொது, விமான கேப்டனின் உடை அணிந்திருப்பதால், இவரது உடை பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும், இவரது கடையில் தயாராகும் உணவுகள் சுவையுடன் காணப்படுவதால் மக்கள் மத்தியில் இக்கடை பிரபலமடைந்துள்ளது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…