ஐஸ்கிரீம் வாங்குவதற்காக ஹெலிகாப்டரை நகரின் மத்தியில் தரையிறக்கிய பைலட்..!

கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை பைலட் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் உள்ள டிஸ்டேல் நகரின் மத்தியில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மருத்துவ ஆம்புலன்ஸ் வண்ணம் பூசப்பட்ட நிலையில் இருந்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறையினர், அவசர மருத்துவ உதவிக்காக ஒருவேளை ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்துள்ளனர். இதன் பின்பு இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதால் அதனை எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தரையிறக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த பைலட்டின் வயது 34. இதன்பின்னர் காவல்துறையினர் பைலட்டின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் நீதிமன்றத்திற்கு வந்து இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கனடா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025