நடிகர் சோனு சூட்டை சந்திக்க 700 கி.மீ நடந்தே சென்ற நபர்!

Default Image
  • நடிகர் சோனு சூட்டை சந்திக்க வெங்கடேஷ் என்பவர் 700 கி.மீ நடந்தே சென்றுள்ளார். 

நடிகர் சோனு சூட் பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் இருந்து ஏழை மக்களுக்கு பல உதவிகளை தற்போது வரை செய்து வருகிறார்.

இந்த நிலையில், தனக்கு உதவி செய்த சோனு சூட்டை சந்திக்க வெங்கடேஷ் என்பவர் ஹைதராபாத்திலிருந்து மும்பை வரை சோனு சூட் வீட்டிற்கு 700 கிலோமீட்டர் நடந்தே சென்றுள்ளார். மேலும் சோனு சூட் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறித்தியுள்ளார்.  மேலும் வெங்கடேஷ் தனது சொந்த ஊருக்கு திரும்பி செல்லவும் நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்