கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற தொலைபேசியை விழுங்கியுள்ளார்.
கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற தொலைபேசியை விழுங்கியுள்ளார். இவர் தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிலையில், தலைநகர் பிரிஸ்டினாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த நபர் ஸ்கேன் மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் போனை விழுங்கியிருப்பதும், போன் ‘ஜீரணிக்க முடியாத அளவுக்கு பெரியது’ மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்ட அதன் அரிக்கும் பேட்டரி காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த நபருக்கு டாக்டர் டெல்ஜாகு தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவரது வயிற்றில் இருந்து போனை அகற்றியுள்ளனர். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, டாக்டர் டெல்ஜாகு ஃபேஸ்புக்கில் தொலைபேசியின் புகைப்படங்களையும், மனிதனின் வயிற்றுக்குள் போன் இருந்தபோது எடுத்த எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி படங்களையும் பகிர்ந்து கொண்டார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…