வீட்டில் வளர்க்க பாம்பை ஆர்டர் செய்த நபர்…! விஷம் நீக்கப்படாத பாம்பு டெலிவரி ஆனதால் அதிர்ச்சி…!
- வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
- பாம்பை விற்ற நிறுவனம், விஷம் எடுக்கப்பட்ட பாம்பிற்கு பதிலாக, விஷம் எடுக்கப்படாத பாம்பை வழங்கியுள்ளது.
சீனாவைப் பொறுத்தவரையில் பல விசித்திரமான விலங்குகள் மற்றும் பறவைகளை தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளப்பதுண்டு. சீனாவில் பாம்புகளை வீட்டில் வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசித்து வரும் ஒருவர் தனது வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
இவ்வாறு ஆர்டர் செய்தவருக்கு பாம்பு வீட்டிற்கு வந்தது. பொதுவாக பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புபவர்கள், அந்த பாம்பில் உள்ள விஷத்தன்மை எடுத்துவிட்ட பின்னரே வாங்குவர். அதன்படி இந்த பாம்பை விற்ற நிறுவனமும் முறைப்படி விஷத்தன்மையை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
இதனையடுத்து பாம்பை வாங்கிய அந்த நபர் பாம்பை பெற்றவுடன், பாம்புடன் ஒருநாள் படுக்கையில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாம்பு அவரின் தொடையை பாம்பு கடித்தது. அப்போது அவர் பாம்பிடம் விஷம் இருந்ததை கண்டு பிடித்து, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் இது குறித்து நடந்த விசாரணையில் பாம்பை விற்ற நிறுவனம் தங்களது கவனக்குறைவால் விஷம் நீக்கப்பட்ட பாம்புக்கு பதிலாக, விஷத்தன்மை நீக்கப்படாத பாம்பினை அவருக்கு அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.